மாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா?
விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments