Header Ads

2020 ஆம் ஆண்டில் - பாரிய வருவாய் இழப்பை சந்தித்த லூவர்..!!

 


லூவர் அருங்காட்சியகம் கடந்த வருடத்தில் பாரிய அளவு வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 

 
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 72% வீத பார்வையாளர்களை லூவர் அருங்காட்சியகம் இழந்திருந்தது. 2019 ஆம் ஆண்டில் 9.6 மில்லியன் பார்வையாளர்களை சந்தித்திருந்த லூவர், 2020 ஆம் ஆண்டில் வெறுமனே 2.7 மில்லியன் பார்வையாளர்களை மாத்திரமே சந்தித்தது.
 
இதனால் அவ்வருடத்தில் மொத்தமாக 90 மில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்திருந்தது லூவர். 
 
2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் லூவர் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக லூவர் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
 இத்தகவலை இன்று வெள்ளிக்கிழமை லூவர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.