Header Ads

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பில் அஜித் ரோஹண வெளியிட்ட தகவல்

 


இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரசெனிகா கொவிட்-19 தடுப்பூசிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பொலிஸ், வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, அஸ்ட்ரசெனிகா கொவிட்-19 தடுப்பூசிகள் வைத்திய பிரிவினருக்கும், இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை(31.01.2021) காலை 9 மணியளவில் பொலிஸ், வைத்தியசாலையில் நிர்வாகப்பிரிவினருக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி – குண்டசாலை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ், வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவினருக்கும் பெப்ரவரி 2 ஆம் திகதி தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.