Header Ads

ஊரடங்கு விதி மீறல் - 110.000 குற்றப்பண அபராதங்கள்!



 கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதியில் இருந்து பிரான்சில் ஊரடங்கு உத்தரவானது மீண்டும் பிறிப்பிக்கப்பட்டது. தேசிய அளவில் முதற்கட்டமாக 20h00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  பின்னர் இது 18h00 மணியாக மாற்றப்பட்டுள்ளது.

 
இதனை முறையாகக் கடைப்பிடிக்க உள்துறை அமைச்சகம் கடுமையான சோதனைகளைச் செய்யும் படி காவற்துறையினர்க்குக் கட்டளையிட்டிருந்தது.
 
இதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 1.418 மில்லியன் வீதிச் சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.
 
இதில் ஊரடங்குச் சட்டத்தினை அத்தியாவசியக் காரணங்கள் இன்றி மீறியவர்கள் 110.000 பேரிற்கு குற்றப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
முதன் முறை மீறுபவர்களிற்கு 135€ குற்றப்பணமும், தொடர்ச்சியாக மீறுபவர்களிற்கு 3750€ வரை குற்றப்பணமும் விதிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.