108 அடி நீளமான சிற்பத்தினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை
பிரேஸிலைச் சேர்ந்த ஜூலியானா நோட்டாரி எனும் (Juliana Notari) பெண் கலைஞர் நிர்மாணித்த 108 அடி (33 மீற்றர்) நீளமான கொற்கிறீட் சிற்பம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரரேஸிலின் வடகிழக்குப் பிராந்தியமாநிலமான பேர்னாம்பு கோவில் உள்ளுர் கலைப் பூங்கா ஒன்றில் இச்சிற்பத்தை நிர்மாணித்துள்ளார்
இந்த சிற்பத்துக்கு என ஜூலியானா பெயரிட்டப்பட்டுள்ளது.
இச்சிற்பத்தை உருவாக்கும் பணியில் 20 இற்கும் அதிகமான ஆண்களும் ஈடுபட்டனர்.
இந்நிர்மாணம் 33 மீற்றர் (120 அடி) நீளமான இச்சிற்பம் 16 மீற்றர் (52 அடி) அகலத்தையும் 6 மீற்றர் (20) ஆழத்தையும் கொண்டது என சி.என்.என். தெரிவித்துள்ளது.
இந்த நிர்மாணமானது இயற்கைக்கும் ஆணாதிக்க மேற்குலக கலாசாரத்துக்கும் இடையிலான உறவை கேள்விக்கு உட்படுத்துவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல்வேறு கலை நிர்மாணங்களை அவர் மேற்கொண்டவர், எனினும் இந்த சிற்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments