Header Ads

பேஸ்புக்கில் பெண்களின் திருவிளையாடல்கள் இதோ!! video

 


இவ்வகை பெண்கள் தங்களை அழகானவர்களாக காட்டிக் கொள்வார்கள்.
மையிட்ட கண்கள், கம்மல் தாங்கிய காதுகள், வளையல் சூழ்ந்த கைகள், கொலுசு கால்கள் இப்படி முழு மேக்கப் உடன் தமது படங்களை பதிவிடுவர், அதே நேரம் இடைக்கிடை மொடேர்ன் ட்ரெஸ் உடனும் விதம் விதமாக படங்கள் போடுவார்கள்.
இயல்பிலேயே ஆண்கள் பெண்களை நாடும் குணத்தோடு படைக்கப்பட்டிருப்பதால், ஆண்களின் இக்குணத்தை இவர்கள் லைக்குகளாக மாற்றிக்கொண்டு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் இடைக்கிடை சொல்லிக் கொள்வார்கள்.
2. நகைச்சுவை பதிவாளர்கள்.
இவ்வகை பெண்கள் தமக்கு சோறு தான் முக்கியம் போன்ற மொக்கை காமெடிகளை பதிவிடுவார்கள், தன்னிடம் பெர்பாம் செய்யும் ஆண்களுக்கு ஸ்டிக்கரை மட்டும் பதிலாக்கி அதிக அளவில் லைக் பெறும் ஆண்களின் பதிவில் மூன்று வரிக்கு குறையாமல் கமெண்ட் செய்யும் வழக்கமுடையவர்கள்.
இவ்வகை பெண்களின் இன்பாக்சை அனுக ஆண்கள் குறைந்தபட்சம் 150/200 லைக் ஆவது பெறுபவராக இருக்க வேண்டும், இல்லையேல் உங்கள் மெஸேஜ்க்கு ரிப்ளை இருக்காது.
3. காதலர்கள்.
இவ்வகை பெண்களுக்கு ஒரு காதலன் இருப்பான். இவர்கள் நெருக்கமான காதலர்களின் படங்களை டவுன்லோட் பண்ணி அதுக்கு ஏதாச்சும் ஒரு மொக்கை கவிதையை கப்ஷன் ஆக போடும் வழக்கமுடையவர்கள்.
இவர்களிடம் விளையாட்டாக பெர்ஃபாம் செய்ய வரும் ஆண்களிடம், எனக்கு ஆள் இருக்கு, என் புருசன்ட்ட கேட்டு சொல்றேன் போன்ற பைத்தியகார பதில்களை சொல்லி கொண்டே இருப்பார்கள்.
4. தெளிவானவர்கள்.
இவ்வகை பெண்களின் பதிவுகள் தெளிவாக இருக்கும், சில நேரம் யதார்த்தமான சில கவிதைகளும் எழுதுவார்கள் அல்லது சேயர் பண்ணியிருப்பார்கள்.
இவர்கள் நைஸ் கமெண்டை வெறுப்பார்கள் ஆனால் நல்லா எழுதுறீங்க, அறிவுப்பூர்வமா எழுதுறீங்க போன்ற கமெண்டில் விழுந்து விடுவார்கள்.

இவர்கள் அதிகபட்சம் 50 லைக் வாங்குபவர்களாக இருப்பார்கள், இவர்களை எளிதாக இன்பாக்சில் தொடர்பு கொள்ள முடியும்.
இன்னொரு வகையில் சொல்லப்போனால் தன்னை தெளிவானவர்கள் என நினைத்துக்கொள்ளும் ஏமாளிகள் எனலாம் 😌
5. திறமை உள்ளவர்கள்
இவர்களுக்கு ஏதாவது ஒரு சிறப்பு திறமை இருக்கும், அதை வெளிப்படுத்த மற்றும் அவற்றை வளர்த்துக் கொள்ள பேஸ்புக் ஐ பாவிப்பார்கள். சிலர் பாடுவார்கள், சிலர் சித்திரம் கீறுவார்கள், சிலர் மொழித்திறன், சிலர் போட்டோ கிராபி இப்படி இவர்கள் அந்தந்த சிந்தனையில் அதை உண்மையாக இரசிக்கும் ஒரு கூட்டத்தை இனங்கண்டு அவர்களுடன் பயணிப்பார்கள்.
6. பேஸ்ட்டி கேர்ள்ஸ்
இவ்வகை பெண்கள் ஆண்களை விட பெண்களையே அதிகம் விரும்புவார்கள், தங்களது செக்சியான படங்களை அதிகளவில் பதிவிடுவார்கள். அவற்றிற்கு ஆண்கள் இடும் பின்னுட்டங்களால் உள்ளே மனது பூரிப்படைந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் பெண்களையே செல்லம், டார்லிங், பேபிம்மா, லவ் யூ என அழைப்பதை காண முடியும். ஏதாச்சும் கசமுசா பதிவுகளை இடைக்கிடை பெண்களை டேக் செய்தே பதிவிடுவார்கள்.
7. சமூக சேவகிகள்
இவ்வகை பெண்கள் ஏதாவது சமூக விழிப்புணர்வு பதிவுகள், உலக சுகாதாரம் சம்பந்தமான தகவல்கள், பெண்களுக்கு நடக்கும் அநீதிகள், நியூஸ் பேஜ்களில் இருக்கும் நியூஸ் போன்றவற்றை சேர் செய்திருப்பார்கள், அதை யார் பார்க்கின்றார்கள், யாராவது ஏதாவது கமன்ட் செய்திருக்கின்றார்களா என்பது பற்றி எதுவும் அவர்களுக்கு பொருட்டே இல்லை.
8. ஏமாளிகள்
இவர்களின் இன்பாக்ஸ் வறண்டே இருக்கும்,
பதிவிலும் பெண்களின் கமெண்ட் மட்டுமே காணப்படும், நட்பில் மிகவும் குறைவானவர்களே இணைக்கப் பட்டிருப்பார்கள். நல்ல பதிவிடும் ஆண்களை நல்லவன் என நம்புவார்கள், இரசிக்கும்படியாய் பேசுபவனிடம் வீழ்ந்து விட கூடியவர்கள்.
9. பெண்ணிய ஹாவ் பொயில்கள்
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கணவனை துரத்தி விட்டு தனியே வாழும் அல்லது பாவப்பட்ட ஒருத்தன் கணவனா அமைஞ்சு இருக்கும் ஜீவன்கள், பெரும்பாலும் இவர்களுக்கு 45/50 வயதை தாண்டி இருக்கும். இவர்கள் தாங்கள் நினைத்த மாதிரி வாழ பெண்ணியத்தை தங்கள் ஆயுதமாக பாவிப்பார்கள். இவர்களை பொறுத்த வரையில் தான் விரும்பிய ஆணுடன் படுப்பதை நியாயப்படுத்த தேவைப்படுவது தான் பெண்ணியம். ஆண்கள் செய்யும் அனைத்தும் தாங்களும் செய்ய வேண்டும் என்பதை அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். தண்ணி அடிப்பார்கள், சிலர் தம்மும் அடிப்பார்கள். இவர்கள் இப்படித்தான், இவர்களை திருத்த யாராவது நினைத்தால் முழு கெட்ட வார்த்தையையும் பிரயோகம் செய்யக்கூட தயங்காதவர்கள். இவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு குரூப் இருக்கும் வரை இவர்கள் இப்படியே தான் இருப்பார்கள், பூமிக்கு பாரமான ஜீவன்கள்.
10.கடவுள் பக்தர்கள்
இவர்கள் கடவுள் சம்பந்தமான படங்கள், அது பற்றிய விடயங்களை பகிர்வார்கள். அவர் அவர்களின் மதம், நம்பிக்கையை பொறுத்து சேர் பண்ணும் விடயங்கள் வேறுபடும்.
11. குட்மோர்னிங் அன்ட் குட் நைட் பதிவாளர்கள்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் காலை பூக்கள், தேனீர் போன்ற படங்களுடனும், இரவில் பெரும்பாலும் பூனைக்குட்டி படத்துடனும் குட்நைட் பதிவும் இடுவார்கள், அவை மட்டுமே அவர்களின் டைம்லைனில் இருக்கும்.
12. சமையல் பிரியர்கள்
தாங்கள் வீட்டில் சமைத்ததை தட்டில் போட முதலே படமெடுத்து இங்கு போடுபவர்கள், சில வேளைகளில் சனி, ஞாயிறு, மற்றும் லீவு நாட்களில் ஏதாவது பலகாரம் செய்தால் அதையும் படமெடுத்து போட்டு புளங்காகிதம் அடைந்து கொள்பவர்கள்.
13. ஊர் சுற்றும் பிரியர்கள்
இவர்கள் நேரம் கிடைக்கும் போது எங்காச்சும் போவார்கள், பெரும்பாலும் போவதற்கு செலக்ட் பண்ணும் இடம், விதம் விதமாக படம் எடுக்க சிறந்ததா என்பதை நிச்சயம் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். எங்காவது போய் வந்து குறைந்தது 30/35 படங்களையாவது அப்ளோட் பண்ணி மற்றவர்களை கடுப்பேத்தும் ஜீவன்கள்.
14. வித்தியாசமான பெயர் பிரியர்கள்
தமது பெயரிலேயே திமிர்பிடித்தவள், குட்டிப்பொண்ணு, ஸ்விட்டி, கில்லர், அழகானவள், அன்பானவள் அப்படி ஏதாச்சும் போட்டிருக்கும் மொக்கை பீஸ்கள்.
15. சிறு சிறு குரூப் மெம்பர்கள்
இவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு 4/5 பேருக்கு மட்டும் தான் மொய் வைக்கும் கணக்காக மாறி மாறி கமன்ட் பண்ணுவார்கள், அதாவது ஏதாவது ஒரு குழந்தை தனமான மொக்கை போஸ்ட் ஐ போட்டு அந்த குரூப்புக்குள் மாறி மாறி கமன்ட் செய்து விளையாடுவார்கள். அதற்கு புதிதாக யாராவது சென்றால், சொல்லாத திருமண வீட்டுக்கு சென்ற கதை தான், அவர்களில் யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள். இதில் யாராவது ஒருவருடன் ஏதாவது பிரச்சனை பட்டாலும் அவர் மட்டுமல்ல, மிச்சம் பேரும் சேர்ந்து; எல்லோரும் பிளாக் பண்ணி விடுவார்கள். இவர்களை இவர்களின் பாட்டில் விடுவது தான் சிறப்பு.
இப்படி பலர் இருக்கின்றார்கள்.

No comments

Powered by Blogger.