முல்லைத்தீவில் கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் இரு சிறுவர்கள்!! நடந்தது என்ன? (video
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில்சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினம் (28) அதிகளவான போதைப்பொருள் ஊட்டப்பட்டமையினால் இரண்டு சிறுவர்களுமசுயநினைவற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலுக்கட்டாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக முள்ளியவளை பொலிஸ்நிலையத்தில் இரண்டு சிறுவர்களுடைய பெற்றோர் முறைப்பாட்டை செய்துள்ளனர்.இதனுடன் தொடர்புடைய மேலும் பலர் (சுமார் 8 பேர்) உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள்தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிறுவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர்.குறித்த சிறுவன் ஒருவனின் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இந்த
கள்ளச்சாராயத்தின் பின்னால் முறிப்பில் காடையர்கள், மரக்கடத்தல் கும்பல்கள், பாதாளகோஸ்டிகள்,
வாள்வெட்டுக்காரர்களும் உள்ளனர். இதனால் ஊருக்கு செல்வதற்கு பயமாக உள்ளது.
சொல்லியிருக்கிறார்கள் கவனமா இரு வெட்டுவன் கொத்துவன் என. எனக்கு பயமாக உள்ளது. எனது
உயிருக்கும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் இந்த அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும்.
இந்த அதிகாரிகளும் எனக்கு தர வேண்டும் என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தொகையில் அரைவாசிக்கு அதிகமாக இராணுவமும் பொலிசாரும்
உள்ள நிலையில், மாவீரர் தினம் மற்றும் நினைவேந்தல்கள் போன்ற தமிழ் மக்களின் உரிமைகளை
தட்டிப்பறிக்க துடிக்கின்றனரே தவிர தமது கடமைகளான சட்டவிரோத செயல்கள் மற்றும் இயற்கை
அழிவுகளை தடுப்பதில் வேடிக்கை பார்ப்பதோடு அதற்க்கு துணைபோய்வருவதாக உறவினர்கள்
குற்றம்சா்டியுள்ளனர்.
அண்மையில் கூட இதே முறிப்பு பகுதியில் அதிகாரிகளின் ஆதரவோடு இடம்பெற்றுவந்த
சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றபோது சட்டவிரோத மரக்கடத்தல்
காரர்களால் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதும் இந்த செயற்பாடுகளை தடை செய்யும் அரச இயந்திரங்களின் தவறுகள்
சுட்டிக்காட்டிடப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு பாரிய பிரச்சினையாக உள்ளபோதும்
பொலிஸாருக்கும் கசிப்பு வியாபாரிகளுக்கும் உள்ள உறவுகள் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இந்நிலையில் முறிப்பு பகுதியில் இவ்வாறான ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரைஒருவரை மாத்திரமே கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மற்றும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம் முறிப்பில் உள்ள இவ்வாறான
குழுக்களுக்கு அரச இயந்தியங்களில் பூரண ஆதரவு உண்டு என்பதனை நிரூபித்துள்ளது.
இதேவேளை பொலிஸாரின் விசாரணையில் நேற்று முன்தினம் (28) ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று (29) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பர் 3 ம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய நபர்கள் இதுவரை கைது
No comments