Header Ads

சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்ற மர்ம நபரால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

 


பிரித்தானியாவின் Kentஇலுள்ள Folkestone என்ற பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரயில் பாதையில் இறங்கிய ஒருவர் பிரான்சை நோக்கி ஓடியுள்ளார்.

அதிவேகமாக ரயில்கள் செல்லும் சுரங்க ரயில் பாதையில் இறங்குவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு ரயில் போக்குவரத்தையும் கடுமையாக பாதிக்கும்.

இந்நிலையில், ஒரு வாரத்துக்குமுன் சுரங்க ரயில் பாதையில் இறங்கிய மர்ம நபரைக் குறித்து இரு நாட்டு பொலிசாரும் தீவிர தேடுதலல் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆனால் குறிப்பிட்ட நபர் ஓடியதில் 31 மைல் சுரங்கப்பாதையின் மறு முனைக்கே சென்று விட்டார்.

அங்கே காத்திருந்த பிரான்ஸ் பொலிசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் தன் பெயர் உட்பட எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

பின்னர், பிரித்தானிய பொலிசார், அவர் பிரித்தானிய சிறை ஒன்றிலிருந்து தப்பிய கைதி என்ற தகவலை பிரான்ஸ் பொலிசாருக்கு அளித்துள்ளனர்.

அவர் பிரித்தானிய சிறையிலிருந்து தப்பி, ஓடியே பிரான்சுக்கு வர முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரை கைது செய்த பிரான்ஸ் பொலிசார், பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்றில் அவரை ஆஜர் செய்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு, Abdul Haroun (40) என்ற சூடான் நாட்டு புலம்பெயர்வோர், இதேபோல் பிரான்சிலிருந்து சுரங்க ரயில் பாதையில் இறங்கி பிரித்தானியாவை நோக்கி நடந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவருக்கு பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.