இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா – நெருக்கடியில் அரசாங்கம்
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டது.
இதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கைக்கான முதல் சுற்றுலா பயணிகள் விமானம் உக்ரேனில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments