Header Ads

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பும் பிரான்ஸ் மக்களுக்கு முக்கிய தகவல்

 



பிரான்ஸ் அரசு இம்மாதம் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு பனிச்சறுக்குக்காக செல்வதை தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கையை முன்வைத்தது.

அவ்வாறு சுவிடசர்லாந்துக்கு சென்று நாடு திரும்புவோர் தொடர்பில் கடுமையான விதிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்ஸ் திரும்புவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்று நிரூபிக்கவேண்டும்.

பிரான்ஸ் திரும்பியதும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த விதிகள் எந்த தரப்பினருக்கு பொருந்தும் என்பது தெளிவாக விளக்கப்படாததால், இந்த அறிவிப்பு ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது ஜெனீவாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம்.

இந்த விதிமுறைகள் சுவிட்சர்லாந்தின் Graubünden, Jura, Neuchâtel, Uri, Valais மற்றும் Vaud ஆகிய பகுதிகளிலிருந்து பிரான்ஸ் திரும்பும், பிரான்ஸ் வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது.

சுவிஸ் வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.

எனவே அவர்கள், கொரோனா சோதனை முடிவுகள் எதுவும் இல்லாமலே பிரான்சுக்கு செல்லலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.