கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட முதல் நாள்! - கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!!
நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான கொரோனா தொற்று விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நேற்று 11,532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை 3,063 பேருக்கு மாத்திரம் தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
314 பேர் நேற்றைய நாளில் சாவடைந்துள்ளனர். இதனால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,072 பேராக அதிகரித்துள்ளது. (இவர்களில் மருத்துவமனைகளில் மாத்திரம் 40,653 பேர் சாவடைந்துள்ளனர்
25,207 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,871 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*****
நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5,000 இற்கு உட்பட்ட தொற்றுக்கள் பதிவாகும் என அரசு எதிர்பார்த்திருந்தது.
ஆனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளே பத்தாயிரத்துக்கும் அதிகமான தொற்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments