🔴 பரிசில் மீண்டும் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
தற்போது பரிசில் பலத்த கலவரம் இடம்பெற்று வருகின்றது. காவல்துறையினர் மீது தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் முதல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. Place du Châtelet பகுதியில் இருந்து Place de la République நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர். ஏராளமான கலவரம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக Boulevard de Sébastopol பகுதியில் சற்றுமுன் பலத்த வன்முறை பதிவாகியுள்ளது.
காவல்துறையினருக்கு புதிய அதிகாரங்கள் வழங்குவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு சனிக்கிழமைகள் பரிஸ் உட்பட்ட ஏராளமான நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்தே இன்றைய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்று வருகின்றது.
No comments