Header Ads

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையிலான போக்குவரத்து தடை தளர்வு

 


பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்ச நிலையினை அடுத்து மூடப்பட்டிருந்த எல்லைகளைத் திறக்க பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல், தரை மற்றும் ஆகாய மார்க்கமான போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய பிரஜைகள், தமக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில், தேசிய சுகாதார சேவை (NHS) பணியாளர்களுடன் ராணுவ வீரர்களும் கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா பரவலை அடுத்து 50 நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்து தடையினை தொடர்ந்தும் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.