Header Ads

ரஷ்யாவில் மூச்சி திணறலால் மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 


ரஷ்யாவில் 59 வயதான பெயரிடப்படாத நபர், தனது 6 வயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பொருள் அவரது வலது மூக்கு நாசிக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.

அவர் தனது ‘கண்டிப்பான’ அம்மாவிடம் இதைப் பற்றி சொல்ல மிகவும் பயந்துள்ளார்.

பிறகு, அப்படி ஒன்று நடந்ததையே அவர் மறந்த நிலையில் ஐம்பது ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் வாழ்ந்துள்ளார்.

சமீபத்தில் தனது வலது நாசியில் மூச்சு விட முடியவில்லை என்பது தெரிந்தவுடன், அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அப்போது தான், அவரது நாசிப் பாதையில் எதிர்பாராத பொருளை மருத்துவர்கள் கண்டுள்ளனர்.

ஒரு துருப்பிடித்த பழைய நாணயம் ஒன்று உள்ளே இருப்பது தெரியவந்தது.

மேலும் Rhinoliths எனப்படும் கற்கள் அந்த நாணயத்தைச் சுற்றி உருவாகி, அவரது சுவாசிக்கும் திறனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.

பிறகு, மருத்துவர்கள் 53 ஆண்டுகளுக்குப் பிறகு Soviet one kopek நாணயத்தை அவரது மூக்கிலிருந்து மீட்டெடுத்தனர்

No comments

Powered by Blogger.