வீதிகளிற்கு பிரான்சிற்காக உழைத்த, வீழ்ந்துபட்ட குடியேற்றவாசிகளின் பெயர்கள்!!
எமானுவல் மக்ரோன், பிரான்சின் வீதிகளிளிற்குப் பிரான்சின் குடியேற்றவாதிகளின் (immigrant) பெயர்களை வைப்பதற்கான திட்டத்தினை எமானுவல் மக்ரோன் உருவாக்கி உள்ளார்.
உதாரணத்திற்கு கோர்சின் விடுதலைக்காக, வீழ்ந்து பட்ட, மொரோக்கா இராணுவ வீரரான Hammou-Moussik, குவாதிலூப்பில் பிறந்த சிறந்த உதைபந்தாட்ட வீரரான Marius-Trésor, அல்லது பிரான்சில் பிரபலாமான ஸ்பெயின் நடிகரான Louis-de-Funès போன்ற பெயர்களை, குடியயேற்றவாசிகள் வசிக்கும் பகுதிகளில் வீதிகளிற்கும், பெரு வீதிகளிற்கும் வைக்க உள்ளதாக, எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இப்படியாக 300 இலிருந்து, 500 வரையான பெயர்களை, அரசாங்கம் தெரிவு செய்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments