குப்பைகளால் நிறையும் மார்செய்!!
கடந்த மாதம் பரிசில் நடந்த குப்பை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பரிஸ் நகரை குப்பைகளின் நகரமாக்கியது.
இதே நிலைமை இப்போது மார்செய்நகரிற்கு வந்துள்ளது.
மார்செய் நகரின் பெரும் பகுதியின் குப்பைகளை அகற்றும் Derichebourg நிறுவனத்தின் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் பணியின் பாதுகாப்பு, மற்றும் வேலைத் தரம் உயரவேண்டும் என்ற கோரிக்கையுடனேயே, இங்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகின்றது.
கடந்த 17ம் திகதியிலிருந்து நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் 900 தொன் குப்பைகள் தேங்கி உள்ளன.
கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலையில், குப்பைகள் தேங்கி நிற்பதால், அந்தப் பகுதி மக்கள் ஆபத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
No comments