Header Ads

அசாதாரண நிலையில் ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து!!

 


இன்று 20h00 மணிக்கு, தொலைக்காட்சியில் பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தனது புத்தாண்டு வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.

அதன் முக்கிய சாராம்சம் பின்வருமாறு..

«மிகவும் அசாதாரண காலத்தில் நாம் புதுவருடத்தினை வரவேற்கின்றோம். கொரொனாவினால் வீழ்ந்து பட்ட 64.000 பேரிற்கும் அவர்களின் குடும்பத்தினரிற்கும் என் ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களை என் நினைவில் கொள்கின்றேன். கொரோனா காலத்தில், மற்றவர்களின் நலனிற்காக முன்னோடிகளாகத் திகழ்ந்த, அனைவரையும் நான் வாழ்த்தி நிற்கின்றேன்»

«பெரும் நம்பிக்கை உள்ளது. மனித குலத்தின் அரிய கண்டுபிடிப்பான, கொரொனாத் தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் போடுவதற்கான உறுதியை நான் வழங்குகின்றேன். இதில் யாரும் ஊடுருவதை நான் அனுமதிக்க மாட்டேன்»

«பெரும் நம்பிக்கையுடன் புதுவருடத்தை வரவேற்போம். அனைவரின் முயற்சியால், நாம் இன்று எழுந்து நிற்கின்றோம். தொடர்ந்து எமது பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவோம்»

«அனைவரிற்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க பிரெஞ்சு மக்கள். வாழ்க பிரான்ஸ்»

என இன்றைய உரையை பிரான்சின் ஜனாதிபதி முடித்திருந்தார்.


No comments

Powered by Blogger.