Header Ads

2021 இல் தொடரும் பகுதிநேர வேலையிழப்புக் கொடுப்பனவு - chômage partiel !!

 


இன்றுடன் இறுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, கொரோனா காலத்திற்கான, அரசின் பிரத்தியேக பகுதிநேர வேலையிழப்புப் கொடுப்பனவான chômage partiel, 2021 இலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
ஆகக்குறைந்தது இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களிற்கும் இந்த பகுதிநேர வேலையிழப்புக் கொடுப்பனவு தொடரும் எனவும், தொகையில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனாவினால் முக்கியமாகப் பாதிப்படைந்த சில துறைகளிற்கு மட்டும் தொடர்ந்து 100% ஊதியமும், மற்றைய துறைகளிற்கு, ஊதியத்தின் கழிவற்ற தொகையின் (rémunération nette) 84% மும் தொடர்ந்து வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
2021 மார்ச் மாதத்தின் பின்னர், இந்த 84% ஆனது 60% வரை குறைவடையலாம் என்ற ஒரு திட்டமும் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அதிகாரபூர்வமாக எங்கும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.