Header Ads

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விடுதி! முற்றுகையிட்ட பொலிஸார்




 சுவிட்சர்லாந்தில் Schwyz மாகாணத்தில், தொழிற்சாலைப் பகுதியில் சட்டவிரோத மதுபான விடுதி ஒன்று இயங்கிவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் பொலிசார் சோதனையின்போது, அந்த மதுபான விடுதியில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.

அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்ப்பிடிக்கவில்லை, மேலும் மாஸ்க் அணியவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பொலிசார் வருவதையறிந்து சில வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த சட்டவிரோத விடுதியின் உரிமையாளரையும், குடித்துவிட்டு கலாட்டா செய்த மற்றொருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சட்டவிரோத மதுபான விடுதியை பொலிசார் சீல் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.