Header Ads

ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உணவக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

 



பரிசில் இன்று திங்கட்கிழமை உணவக உரிமையாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 
<<உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கவேண்டும்!>> என அவர்கள் கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். பகல் 1 மணிக்கு Place des Invalides பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உணவக உரிமையாளர்கள் மற்றும் தேநீர் விடுதி உரிமையாளர்கள் என மொத்தம் 2,000 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அனைத்து உணவகங்களும் ஜனவரி 20 ஆம் திகதியே திறக்கப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கிருஸ்மஸ் கால விடுமுறையின் போது தங்களது உணவங்களை திறக்க அனுமதி கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
<<நாங்கள் பணிக்குச் செல்வோம்.. ஏனென்றால் நாங்கள் அத்தியாவசியமானவர்கள்>> என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 



 

No comments

Powered by Blogger.