கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாத பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா மக்கள்
லண்டனில் உருவாகிய புதிய கொரோனா தொற்றின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர்.
சரக்கு லொரி சாரதிகள் பலரும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்னும் ஆயிரக்கணக்கான லொரிகள் பிரித்தானிய- பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.
இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
சிலர் கிறிஸ்துமஸ் முடிவடந்த பின்னர் தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன் கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சரக்கு லொரி சாரதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
No comments