உச்சத்தைநோக்கிச் செல்லும் தொற்றும் சாவுகளும்!!
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 296 பேர் சாவடைந்துள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது கடந்த 24 மணிநேரச் சாவுகளுடன் 56.648 ஆக உயர்ந்து பெரும் அழிவை உருவாக்கி உள்ளது.
அரசாங்கம் நாளொன்றிற்கு 5.000 பேரிற்கும் குறைவாகவே தொற்றுக்கள் இருக்குமாறு கட்டுப்படுத்தவோம் என இலக்கு வைத்திருக்க, மீண்டும் கொரேனாத் தொற்று அதிகரித்தே செல்கின்றன.
இன்று கடந்த 24 மணிநேரத்திற்குள் 14.595 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இது 13.713 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
25.526 கொரோனா நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 3.078 கொரோனா நோயாளிகள் உயிராபத்தான நிலையில் உள்ளனர்.
எமானுவல் மக்ரோன் உள்ளிருப்பை நீக்குவதற்காக அறிவித்த நிபந்தனைகளில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2.500 இற்கும் 3000 இற்கும் இடைப்பட அளவில் நோயாளிகள் குறைக்கப்படல் வேண்டும் என்பதும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments