Header Ads

யாழில் இறந்த புறாக்களுக்கு நீதி கேட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நபர்

 



யாழ்.கொக்குவில் பகுதியில் நபர் ஒருவர் புறா வளர்த்து வந்த நிலையில் சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவரினால் அண்மையில் புறாக்களுக்கான தடுப்பூசியை ஏற்றியிருக்கின்றார்.

இதனையடுத்து அவர் வளர்த்துவந்த 116 புறாக்கள் இறந்துள்ளன. இந்நிலையில் புறாக்களை வளர்த்துவந்த நபர் தனக்கு நீதி பெற்றுத்தருமாறுகோரி வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.

குறித்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இறந்த புறாவுக்களுக்கான மரணச் சான்றிதழ் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.




அதோடு வழக்கில் முன்னிலையான கால்நடை வைத்திய அதிகாரி இறந்த புறாக்கள் தவறுதலான தடுப்பூசி ஏற்றப்பட்ட மையால் உயிரிழந்ததாகவும் புறாக்கள் இறந்து இரண்டு மணித்தியாலத்துக்குள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

எனினும் இரு புறாக்களை பரிசோதித்து ஒட்டுமொத்த புறாக்களுக்குமான மரணச் சான்றிதழைதான் வழங்கியதாக தெரிவித்த கால்நடை வைத்திய அதிகாரியை சட்டத்தரணி எதிர்தரப்பு சட்டத்தரணி மனிதர் இறந்தால் தனித்தனியாக பிரேத பரிசோதனை செய்யும் வழமை இருக்கிறது என்றும், அவ்வாறான நிலையில் 116 புறாக்கள் இறந்ததற்கு ஏன் இரு மருத்துவ அறிக்கைகள் வழங்கினீர்கள் என கேட்டார்.

இதனையடுத்து வாதங்களைக் கேட்ட நீதிவான் வழக்கை அடுத்த வருடம் சித்திரை மாதம் வரை ஒத்தி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.