Header Ads

தொடருந்துத் தாக்குதல் பயங்கரவாதி - வாழ்நாள் தண்டனை!!

 


2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி, ஆம்ஸ்டெர்தாமில் இருந்து பரிஸ் நோக்கி, பிரான்ஸ் தொடருந்துச் சேவையின் (SNCF) தலிஸ் (THALYS) அதிவிரைவுத் nhடருந்து வந்துகொண்டு இருந்தது.

இதில் பெஸ்ஜியத்தின் புரூக்செல் தொடருந்து நிலையத்தில் வைத்து இஸ்லாமியப் பயங்கரவாதி, எயுப் அல் கசானி (Ayoub El Khazzani) ஏறினான்.

அவன் கையில் ஒரு AK47 இயந்திரத்துப்பாக்கி, அதற்குரிய 300 ரவைகளுடனான ரவைக்கூடுகள், கூரியகத்தி, மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை இருந்துள்ளன. நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிக்கும் நோக்குடன் இவன் உள்ளே ஏறியுள்ளான்.

இந்தத் தொடருந்தில் அமெரிக்க இராணுவ வீரர்கள், மற்றும் ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதிகள பலரும் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களைக் கொன்று குவிக்கும் ஆணை இவனிற்கு வழங்கப்பட்டது.ஆனால் இவன் இந்தக் கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்த எத்தனிக்கையில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்களால் மடக்கப்பட்டு, தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இவனிற்குப் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், வாழ்நாள் ஆயுட்தண்டனை விதித்துள்ளது.

 

No comments

Powered by Blogger.