Header Ads

கனடாவையும் விட்டுவைக்காத புதிய கொரோனா வைரஸ்! இருவருக்கு தொற்று உறுதி

 


கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 534,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14,700 பேர் உயிரிழந்துள்ளமையால் இதன் காரணமாக கனடாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Durham-ல் இருந்து கனடா திரும்பிய இருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தளவிற்கு ஆபத்து இல்லை எனவும், இவர்கள் ஒன்ராறியோவை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், ஒன்ராறியோவில், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் இன்று தொடங்கும் மாகாண அளவிலான பணிநிறுத்த நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தலைமை மருத்துவ அதிகாரி, பார்பரா யாஃப் கூறியுள்ளார்.

இந்த ஜோடி தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில் சுமார் 14 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

இதனால் இதன் தெற்கில் 28 நாட்கள் வடக்கில் 14 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இருந்து கனடாவிற்கு வரும் பயணிகள் விமானங்களை நிறுத்தி வைப்பதாகவும், இது ஜனவரி 6-ஆம் திகதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.