Header Ads

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிரித்தானிய மகாராணி

 


பிரெக்சிட்டுக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எத்தகைய உறவு இருக்கும் என்பதை முடிவு செய்யும் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மசோதா நேற்று நாடாளுமன்றம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரே நாளில் அதை சட்டமாக்க உதவிய தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.

சரியாக அதிகாலை 12.25க்கு, நாடாளுமன்ற சபாநாயகரான Sir Lindsay Hoyle, ஒப்பந்த சட்டத்திற்கு மகாராணியார் ஒப்புதலளித்து கையெழுத்துவிட்டார் என்ற செய்தியை நடாளுமன்றத்தில் அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய (எதிர்கால உறவுகள்) சட்டம் 2020, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே செய்யப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை உள்ளடக்கியுள்ளது.

இன்று நள்ளிரவுடன் பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிடும்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகின்றது என்று கூறினார்.

டிசம்பர் 31ஆம் திகதி இரவு 11 மணி, நம் நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது,

அத்துடன் நமது மிகப்பெரிய கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவும் ஆரம்பமாகின்றது என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.