இலங்கையில் ஒரு பகுதியில் 2 நாட்கள் வானில் இருந்து கொட்டிய மீன்கள்!
பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ‘விரானகம’ என்ற கிராமத்தில் மீன் மழை பொழிந்துள்ளது.
கடந்த 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களிலும் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
வீடு மற்றும் வயல் நிலங்களுக்கு முன்னால் இவ்வாறு மீன்கள் விழுந்தன எனவும் இதற்கு முன்னர் இப்பகுதியில் இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.
மழைக்கு மத்தியிலும் மக்கள் வீதியில் இறங்கி, விழுந்த மீன்களை பக்கெட்டுகளில் சேமித்து எடுத்து சென்றுள்ள சம்பவமும் இடம்பெற்றது.
குறித்த மழை மூலம் சுமார் 100 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்கள் நிலத்தில் விழுந்திருக்ககூடும் எனவும், ஒரு சிலர் 30- 40 கிலோ வரை மீன்களை சேமித்ததாகவும் கூறப்படுகின்றது.
No comments