கடந்த 24 மணி நேரம் - மீண்டும் உச்சம் நோக்கி 18.264 தொற்று!!!
எமானுவல் மக்ரோனிற்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனத் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிச் செல்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 18.264 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுப் புதன்கிழமை 17.615 ஆகவும், செவ்வாய்க்கிழமை 11.532 ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளிற்கு நாள் பெரும் அளவில் கடுமையான கொரோனத் தொற்றாளர்கள் அதிகரிப்பது. கொண்டாட்டங்காலங்களின் பின்னரான காலம் குறித்தான பெரும் அச்சம் நிலவுவதாக, பிரான்சின் பொதுச் சுகாதாரத்தின் இயக்குநர் ஜெரோம் சோலமொன் தெரிவித்துள்ளார்.
No comments