இன்று முதல் புதிய அனுமதிப்பத்திரம்!
வெளியில் செல்வதற்குரிய புதிய அனுமதி பத்திரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை நவம்பர் 28 ஆம் திகதி முதல் பிரான்சில் இரண்டாம் கட்ட உள்ளிருப்பில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் அனுமதி பத்திரம் கட்டாயமாக நீங்கள் தொடருந்து கொண்டு செல்லவேண்டும்.
புதிய அனுமதி பத்திரத்தை <<இங்கே>> தரவிக்கலாம்!
தண்டப்பணம்!
போதிய ஆவணங்கள் மற்றும் அனுமதி பத்திரம் உங்களிடம் இல்லையென்றால் உங்களுக்கு 135 யூரோக்கள் தண்டப்பணமும், அடுத்த 15 நாட்களுக்குள் அதே தவறை மீண்டும் செய்தால் இம்முறை 200 யூரோக்களும், அதன் பின்னரும் அதே தவறை மீண்டும் செய்தால் இம்முறை 3,750 யூரோக்கள் தண்டப்பணமும், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments