விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் அவுஸ்திரேலியா பயணம்.
பொதுநலவாய அமைப்பின் அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா பயணமானார்.
21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவருகின்றது. இந்நிகழ்வுகளில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
No comments