களவெடுத்த மெத்தையையும் கள்ளக்காதலிக்கு அன்பளிப்பு செய்த சட்ட மாணவன் என்று சொல்லும் காமூகன் ஜீவா .
கடந்த 02:04:2018 திங்கட்கிழமை மதியம் 02:30 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள த.தே.பண்பாட்டுப் பேரவையின் அலுவலகத்தில் நடந்தகொள்ளைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
அன்று மதியம் த.தே.பண்பாட்டுப் பேரவை அலுவலர்கள் வெளி வேலைக்காக அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றிருந்த சமயத்தில் இதை அறிந்திருந்த ஜீவாவும் அவரது 08 கூலிப்படைகளும் மகேந்திரா வாகனத்தில் மதியம் 02:30 -03 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில வந்து பேரவை அலுவலகத்தில் பூட்டப்பட்டிருந்த வெளிப்பூட்டை உடைத்து உள்ளே சென்று அலுவலக பிரதான கதவை உடைத்து உட்சென்று அலுவலக அறை கதவையும் உடைத்து அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களையும் மணிக்கணணி,வீடியோகமரா,டிஜிட்டல் கமரா இவைகளை களவாடியும் அலுவலகத்தை முற்றாக அலங்கோலப்படுத்தி அங்கிருந்த எமது விடுதலைப் போராட்ட நினைவு ஆவணங்களை எடுத்தும் எமது பேரவை அலுவலகத்தில் இருந்த எமது தேசிய தலைவரின் 08 அடி உயரமான பனர் கட்டவுட், மற்றும் தியாகி திலீபனின் நினைவு அஞ்சலி செய்யும் படம், மாவீரர் தினத்திற்கு கட்டிவிட்டு வைத்திருந்த ஒரு தொகை சிவப்பு மஞ்சல் கொடிகளையும் அலுவகத்திற்குப் பின்னால் தூக்கி எறிந்து தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளார்கள் இந்த ஜீவாவும் அவரது கூலிப் படையும்.
மேலும் தொடர்ச்சியாக எமது பேரவையின் பிரதான பெயர் பலகையை உடைத்து அலுவலகத்திற்குப் பின்னால் ஏறிந்து விட்டு பின் ஜீவா கும்பல் கீழ் மாடிக்கு வந்து அதற்குப் பூட்டப்பட்ட பூட்டை உடைத்து அங்கிருந்த சமையல் அறை பொருட்கள் படுக்கையறைப் பொருட்கள் , இவற்றையும் அடித்து உடைத்து சேதாரப்படுத்தியும் பின் தாங்கள் வந்த மகேந்திரா வாகனத்தில் களவாடிய பொருட்களை ஏற்றிச் சென்றிருந்தார்கள் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பேரவை அலுவலர்கள் கேள்விப்பட்டவுடன் உடனடியாக யாழ்ப்பாண பொலீசில் அறிவித்து பின் அனைத்து தரப்பு பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவித்து விட்டு அவர்களின் உதவியுடன் அலுவலகம் சென்று பார்த்த போது கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு, எரிக்கப்பட்டு இருந்ததையும் அங்கு பூட்டப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் Dvr களவாடப்பட்டிருந்ததையும் அனைவரும் நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
பின்னர் அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு ஜயாவிடம் விசாரித்த போது அவரது கருத்தின் படி இந்த ஜீவாவும் சில நபர்களும் வந்திருந்தார்கள் எனவும் அவர்கள் தான் இந்த வேலையை செய்தார்கள் என்னால் அதை தடுக்க முடியவில்லை என்றும் யாழ்ப்பாண பொலீசார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கும் முறையிட்டதை அடுத்து ஜீவா மேல் இருந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்பட பொலீசார் ஜீவாவை தொடர்பு கொள்ள முற்பட்டு அவரது கை தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அவர் அதை நிராகரித்து கொண்டார்.
பின்னர் அவ் வழியால் வந்த பெயர் குறிப்பிட முடியாத பேரவையினருக்கு நன்கு தெரிந்த அரச அலுவலர் ஒருவர் சம்பவத்தை கேள்விப்பட்டு பேரவையினரிடமும் பொலீசாரிடமும் கூறினார் மதியம் தான் இவ்வழியால் போகும் போது எனக்கு முன்பாக ஒரு மகேந்திரா வாகனத்தில் ஏதோ பொருட்களை ஏற்றிய வாறு ஒரு கும்பல் சென்றது என்றும் அது குருநகர் பகுதிக்கு சென்றது என்றும் அவர் முறையிட்டதை தொடர்ந்து பேரவையினர் பொலீசாரிடம் ஜீவாவிற்கு குருநகரில் ஒரு தெரிந்த வீடு இருப்பதாகவும் அங்கு உள்ள ஒரு யுவதிக்கும் ஜீவாவிற்கும் சமீப காலமாக தொடர்பு இருப்பதாகவும் வழமையாகவே ஜீவா மது அருந்தி விட்டு நள்ளிரவில் அந்த யுவதியின் வீட்டிற்கு போய் வருவது வழக்கம் எனவே அந்த வீட்டை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து பார்க்கலாமா என பொலீசாரிடம் கேட்ட போது பொலீசார் மேல் அதிகாரிகளிடமும் கதைத்து விட்டு அனுமதி பெற்ற பின்பு மாலை 07:00 மணியளவில் பொலீசார் அந்த யுவதியின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டை சோதனை செய்த போது அங்கு ஒரு அறையின் மூலைப்பகுதிக்குள் பேரவையின் அலுவலகத்தில் களவாடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன பொலீசார் விரைந்து அந்த வீட்டு உரிமையாளரையும் அங்கிருந்த யுவதியையும் விசாரித்த போது அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் மதியம் அளவில் ஜீவாவும் அவருடன் வந்த சிலரும் தான் இந்த பொருட்களை இங்கே இருக்கட்டும் என்று வைத்தார்கள் என கூறினார்கள்.
அதன் பின் யாழ்ப்பாண பொலீஸ் நிலைய குற்றப்புலணாய்வுப் பிரிவினர் களவாடிய பொருட்களை மீட்டு அது வைக்கப்பட்ட வீட்டு உரிமையாளரையும் கைது செய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்று அன்று இரவே இவரது வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டார்கள் இந்த கைது சம்பவத்தை அறிந்த ஜீவா தற்பொழுது வரை தலைமறைவாகி உள்ளார் என்பதுடன் இவருடன் வந்த கூலி குழுவினரையும் கைது செய்வதற்கு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அங்கு வந்த மகேந்திரா வாகனத்தையும் பொலீசார் தேடிவருகின்றனர் இந்த களவு சம்பவத்துடன் தொடர்புடைய ஜீவா மற்றும் 08 பேரும் இன்று அல்லது நாளை சரணடையாது விட்டால் நீதி மன்றத்தினுடாக திறந்த பிடியானை உத்தரவு வழங்கப்படுமென உத்தியோக பூர்வமாக அறிய முடிகின்றது .
மேலும் இச் சம்பவம் தொடர்பாக த.தே.பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சுவீகரன் நிஷாந்தனிடம் கேட்ட போது மேலுள்ள செய்திக்குறிப்பில் உள்ள அனைத்தும் உண்மையேன்றும் விரைவில் ஜீவா என்று அழைக்கப்படும் சாம்பசிவம் ஜீவானந்தன் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்றும் அதன் பின் அவர் செய்த களவு நிறுபனமாாகி உள்ளதால் நீதி மன்றத்தினால் நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்றும் தற்பொழுது தலைமறைவாகி உள்ள ஜீவா இந்த வழக்கை திசை திருப்புவதற்காக தனது முகநூலில் பொய்யான குற்றச்சாட்டுகளை பேரவை மீதும் என் மீதும் சுமத்தி வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது என்றார்.
No comments