ஊடகங்களுக்கு அவர்மேலும் கருத்துதெரிவிக்கையில்...
தற்போது ஆட்சிசெய்கின்ற அரசைஅனைவரும் நல்லாட்சிஎன அழைத்தார்கள். இந்தஆட்சியில்நடைபெறுகின்றவிடயங்களைஅவதானிக்கின்ற போது,நல்லாட்சி எனும் சொற்பதத்துக்கான ஒருபண்புகளையும்அவதானிக்கமுடியவில்லை. நல்லாட்சிஎன்பது மக்களின்நலனைமுன்னிறுத்தியதாகஅமைதல் வேண்டும்.மாறாக, மக்களின் மீதுஅநீதிகளையும்,சுமைகளையும்அதிகரிக்கச் செய்யும் ஒருஅரசை நல்லாட்சி எனஅமைப்பதுபொருத்தமாகாது.
இந்த ஆட்சிஅமையப்பெற்ற பின்பு,இலங்கை நாட்டு மக்கள்பல்வேறு இடர்பாடுகளைஅனுபவித்திருந்தனர்.அதில் பிரதானமானதுவரிச் சுமையாகும். இந்தஆட்சி அமைந்ததுதொடக்கம் இன்று வரைபுதுப்புதி வரிகளைஅதிகரித்திருந்தது.அண்மையில்நாய்களுக்கு கூட வரியைஅதிகரித்திருந்தது. அந்நேரத்தில் பிச்சைகாரர்களை கூட, இந்தஅரசு விட்டுவைக்காதெனபாராளுமன்றத்திலேயேஒரு பேச்சுசென்றிருந்தமைநினைவூட்டத்தக்கது.
இப்போது சர்வதேசநாணய நிதியத்தின்கோரிக்கைக்குஅமைவாக புதிய உள்நாட்டு வருவாய்சட்டத்தின் ஊடாக புதியவரிகள்திணிக்கப்பட்டுள்ளன.இதனைஅவதானிக்கின்ற போது,மக்களின் பணத்தை ஆழஊடுருவி உறிஞ்சிஎடுப்பதாகவேஅமைந்துள்ளது. இந்நிலையை தொடரவிட்டால், இவ்வரசுஇலங்கை மக்களைவறுமைக்குள் வலித்துதள்ளப்படுவதாகஅமைந்துவிடும்.
இது பற்றி ஏதேனும்கேள்வி எழுப்பினால்,முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ பட்டகடனை அடைக்கவேஇவ்வாறு செய்கிறோம்என்பார்கள். இம்முறைஇவ்வாறானநியாயப்படுத்தல்கள்சற்றுகுறைவடைந்துள்ளதைஅவதானிக்க முடிகிறது. இனியும் அவ்வாறு கூறமுடியாதல்லவா?
இந்த ஆட்சியாளர்கள்பெருமளவான மக்கள்பணத்தைசூறையாடியுள்ளனர்.அதனை பிணை முறிவிவகாரத்தின் மூலம்அறிந்துகொள்ள முடியும்.இவற்றை மிக அவசரமாகமூடி மறைத்தாகவேண்டும். அவர்கள்இழந்த பணத்தைநிரப்பிக்கொள்ளஎத்தனையோ, மக்களைபாதிக்காத மாற்றுவழிகள் இருந்தும்,அவற்றை எல்லாம்செய்யாது (செய்வதற்குதெரியாது), மக்களிடம்இருந்து உறிஞ்சிஎடுக்கவே இவ்வாறானவரிகளை இவ்வரசுவிதித்துக்கொண்டிருக்கின்றது. இவற்றைஇலங்கை மக்கள் புரிந்துகொண்டு, கடந்தஉள்ளூராட்சி மன்றதேர்தலில் புகட்டியபாடத்தை விட, சிறந்தபாடம் புகட்ட தயாராகவேண்டும் எனகுறிப்பிட்டுள்ளார்.
No comments