Header Ads

பாலியல் நடவடிக்கையில் இலங்கை முஸ்லிம்கள்




பேருவளை பிரதேச சபையில் முஸ்லிம் ஒருவர் உப தலைவராக வருவதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன அணியினர் ஆதரவு வழங்கிய போதும் ஐ.தே.கவானது எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம்இ அதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழித்து முஸ்லிம்களின் பரம விரோதி என்பதை நிரூபித்துள்ளதாக பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுகான் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

பேருவளை பிரதேச சபையில் சிறி லங்கா பொதுஜன பெரமுன 20 ஆசனங்களையும்இ ஏனைய கட்சிகள் அனைத்தும் 20 ஆசனங்களையும் பெற்றிருந்தன. தவிசாளர் தெரிவின் போது சிறி லங்கா பொதுஜன பெரமுனவுக்குஇ சுதந்திர கட்சி ஆதரவளித்ததன் மூலம்இ அக் கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

உப தவிசாளர் தெரிவின் போதுஇ சிறி லங்கா பொதுஜன பெரமுனவானது சு.காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிமின் பெயரை முன் மொழிந்திருந்தது. இவர்கள் 20 பேரில் 15 பேர் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர். இதன் போது முஸ்லிம் ஒருவர் உப தலைவராக வரக் கூடாது என்பதற்காகஇ ஐ.தே.கவினர் சிறி லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரின் பெயரை முன்மொழிந்து இகுழப்பியிருந்தனர்.

அவர்கள் தங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது முன் மொழிந்திருக்கலாம். அது நியாயமானது. அவர்களேசிறி லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரின் பெயரை முன்மொழிந்துள்ளமையானதுஇ ஏதோ ஒன்றை நோக்காக கொண்டதென்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. தங்களது கட்சியை சேர்ந்த ஒருவரின் பெயரை முன் மொழிந்தால்இ அது நிச்சயம் தோல்வியை தழுவும்.

சிறி லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவரின் பெயர் முன்மொழியப்படும் போதுஇ நிச்சயம் அக் கட்சியில் உள்ள சிலர் அவருக்கு ஆதரவு வழங்குவர். முஸ்லிம் ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்பு இல்லாமலாக்கப்படும். பேருவளை பிரதேச சபைக்கு முஸ்லிம் உப தலைவர் ஒருவர் தெரிவானால்இ அது ஐ.தே.கவின் முஸ்லிம் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும். முஸ்லிம் ஒருவரை உப தலைவராகாமல் தடுப்பதன் மூலம்இ தொடர்ந்தும் தங்களது கட்சிக்கு முஸ்லிம் ஆதரவை பெற முடியும்.

இவர்களது இந்த குறுகிய சிந்தனைகளை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் ஐ.தே.கவினர் முஸ்லிகளை கறிவேப்பிலையாகவும்இ வாக்களிக்கும் இயந்திரங்களாகவுமே பயன்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் பிடிக்காது. ஐ.தே.கவினரின் இவ்வாறான கீழ்த்தரமான சிந்தனைகளை அறிந்துஇ முஸ்லிம்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.