முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைத் தாக்குதல் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை மிகப் பெரியளவில் திகன பிரதேசத்தில் பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த வன்முறை 83 ஜுலை கலவரம் போன்று தொடர்ச்சியாக 3 நாட்கள் தொடர்ந்தது. கண்டி பிரதேசமெங்கும் பெரும் வன்முறைகள் வெடித்து பள்ளிவாசல்கள், கனக்கிலடங்காத முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு உயிர் ஒன்றும் பலியாக்கப்பட்டு பெரும் கொடூரம் நடைபெற்றுள்ளது.
பேரினவாதக் காடையர்களின் காட்டுமிரான்டித் தனமான இவ்வினவாத வன்முறைச் சம்பவம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு அரசுக்கு சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பாடாத வகையில் பாதுகாப்பு அரன்களை உருவாக்க வேண்டிய தேவை எம் சமூகத்திற்குள்ளது. அந்தவகையில் இவ்வன்முறைச் சம்பவத்தின் புகைப்படங்கள், கானொளிகள் உள்ளிட்ட ஆவணங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சமூகப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகவுள்ளது.
எனவே குறித்த இனவாத தாக்குதல் சம்வத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வகையில் களத்திலிருந்து செயற்பட்ட அரசியல் தலைமைகள் இவ்விடயத்தை சர்வவதேச மயப்படுத்துவதில் அதே உணர்வுடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.
திகன வன்முறைச் சம்பவம் ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று (09) வெள்ளிக்கிழமை வரையில் 5 நாட்களாக களத்திலிருந்தவாறு கண்டி மாவட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல விடயங்களை மேற்கொள்வதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அர்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றார்.
அந்தவகையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விடயங்களை குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்துவதற்கான ஆயத்தங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார். மேலும் லண்டனிலிருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவை சொலிசிடர் பௌமி தலைமையில் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினையும் பிரதி அமைச்சர் ஹரீஸ் எடுத்துவருகின்றார்.
No comments