தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபித்த தமிழ் இளைஞர்கள்!
இன்றைய தினம் முஸ்லிம் ஊரில் திடிரென்று உருவாகிய கலவரங்கள் டயர் எரிப்பு ஆங்காங்கே வீதி நாசம் செய்தல் நடைபெற்றது.கல்முனைநகருக்கு பாடசாலை, அரச அலுவலகம், வைத்தியசாலை, போன்றதிற்காக வெளியூர்களான மட்டக்களப்பு, திருகோணமலை, திருக்கோயில் என தூர இடங்களிலிருந்து வருகை தந்த தமிழ் மக்கள் திக்குதெறியாது நடுத்தெருவில் தத்தெளித்து காணப்பட்டார்கள்.
மருதமுனை போன்ற முஸ்லிம் ஊர்களால் அம்பாரையிலிருந்து சிங்கள மக்கள் வரபோவதில்லை என்பதை நன்கு அறிந்துவைத்துள்ள முஸ்லிம் வன்முறையாளர் இவ் ஊர்கள் குறுக்கால் சென்ற தமிழருக்கு அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.
இன்று அதிகாலை விடிந்தும் விடியாத நிலையில் தூர இடமிருந்து வந்த எம்மக்கள் கல்முனை மாநகரில் நிர்க்கதியான நிலையில் தெய்வமே துணையென பாரத்தை போட்டு பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
கல்முனை மாநகர் வாழ்தமிழ் இளைஞரின் ஒற்றுமையும் எமது தமிழ் சமூகத்திற்கு காட்டிய வழிப்பாதை முக்கியமானது.
ஊரை நம்பி வரும் தமிழருக்கு யார் பாதுகாப்பு அந்த ஊர் தமிழர்தானே??? அதைப்பற்றி கவலைபடாமல் அவர்கள் வெளியூர்தானே அவர்கள் எப்படி போனாலும் நமக்கென்ன எனும் சுயநல மனநிலையை விட்டு எம் கல்முனைவாழ் தமிழ் இளைஞர்கள் வெளியூர்யிருந்து வந்த ஒவ்வொருவரை தமது சொந்த உடன்பிறந்த உறவுகளாக கருதி சகலதமிழ் மக்களையும் பாதுகாப்பாக ஒவ்வொரு வாகனங்களாக ஏற்றி அவர் அவர் ஊராக அனுப்பி கல்முனை மாநகர தமிழர் வீதியை ஏதும் அசம்பாவிதம் இடம்பெறாமல் பாதுகாத்தார்கள்.
2009பிறகு வடகிழக்கில் உறுதியான தமிழ்தலமைகள் இல்லாத போது எம்மினத்தை காப்பாற்ற ஒவ்வொரு கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்களும் இவர்களை போன்று தற்போதைய இனவிரோதம் மோசமான காலத்தில் முன்வர வேண்டும்.
No comments