ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படியுங்கள்
அன்று ஓமந்தை கடந்தபின் விடுதலை வீரராகவும் களமுனைப்புயல்களாகவும் தெரிந்த நாங்கள் இன்று மாங்குளத்தில் விறகுவித்துக்கொண்டும் முறுகண்டியில் கச்சான் வித்துகொண்டும் இருக்கிறோம்..... இன்னும் ஐந்து வருடம் கடந்தபின் ஆனையிறவுவெட்டையிலோ முகமாலை திருப்பத்திலோ யாரேனும் ஊனத்துடன் பிச்சையெடுத்தால் கூர்ந்து கவனியுங்கள்..... அது போராளியாகவோ அல்லது மாவீரன் பெற்றெடுத்த பிள்ளையாகவோ இருக்கும்... அப்போதும் கடந்துசெல்லுங்கள்........ ஒன்றுசொல்கிறோம் உங்களுக்காகவும் எங்கள் தாயகத்துக்காகவும் தலைவன் வழிசென்றதை கௌரவமாகவே கருதுகிறோம்.
அனைவரும் உதவி செய்வோம்
முடிந்தால் பகிருங்கள் உறவுகளே
No comments