நாட்டை வந்தடைந்தார் தனுஷ்க குணதிலக்க
விரைவில் தனது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்றைய தினம் அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments