பாரதீய ஜனதா கட்சியிலிருந்து நடிகை கௌதமி விலகினார்!
பாரதீய ஜனதாக்கட்சியில் இருந்து நடிகை கௌதமி விலகியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், தனிப்பட்ட நெருக்கடியின் போது கட்சித் தலைமையிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் கடுமையான இதயத்துடனும் ஏமாற்றத்துடனும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை ஒருவர் மோசடி செய்துள்ளார் என்றும், எனினும் கட்சியின் சிலர் அவருக்கு தீவிரமாக ஆதரவளிகின்றனர் எனவும் கௌதமி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments