ஆணிகளை உட்கொள்ள வைத்த கொடூரம்!
சவூதிஅரேவியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஒருவருக்கு, உணவுக்காக ஆணிகளை உட்கொள்ள வைத்து, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக கடந்த ஜீலை மாதம் பணிப்பெண்ணாக ஒருவர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் பணிப்புரிந்த வீட்டு உரிமையாளரினால் உணவளிக்கப்படாமை தொடர்பில், அவரை சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிய வெளிநாட்டு முகவர் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரால் அவருக்கு உணவுக்கு பதிலீடாக ஆணிகளை விழுங்குமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments