ரயில் நிலையங்களில் இன்றும் குவிக்கப்படும் இராணுவம்!
நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், ரயில்வே திணைக்களத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு ரயில்வே திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்த்ராவா தெரிவித்தார்.
இதனால், ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், நடமாடும் சேவை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
No comments