மாணவர்கள் தூங்குவதற்கு கட்டணம் கேட்கும் பாடசாலை!
சீனாவின் - குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் பாலர் பாடசாலை ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர்களுக்கு பாலர் பாடசாலை சார்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குழந்தைகள் பாடசாலை மேசையில் தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், மிகவும் வசதியாக மெத்தையில் தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments