கிளிநொச்சி உயர்தர பாடசாலை மாணவி மாயம்!
கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள உயர்தர பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்த மாணவியைக் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த மாணவி காணாமல்போன தினத்தன்று அவர் மேலதிக வகுப்புக்கும் சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாணவி கண்டறியப்படாமையினால் பொதுமக்களின் உதவியைப் பொலிஸார் கோரியுள்ளனர். மாணவி தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
No comments