சூடான் தலைநகரில் ஆளில்லா விமான தாக்குதல் - 40ற்கும் அதிகமானோர் பலி!
சூடான் தலைநகர் கார்டோமில் இராணுவத்தினர் துணை இராணுவத்தினரை எதிர்த்து ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குறித்த ஆளில்லா விமானம் திசை மாறி அங்குள்ள சந்தைப்பகுதியில் வீழ்ந்ததில், சுமார் 40க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சூடானில் ராணுவ ஆட்சி இடம்பெறுகிறது.
அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments