அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
அமெரிக்காவின், ஜோர்ஜியா மாகாணத்தின் - அட்லாண்டா நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீரென அடையாளம் தெரியாத மூவர் அந்த வணிக வளாகத்திற்குள் நுளைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது துப்பக்கிதாரிகளை நோக்கி வணிக வளாகத்திற்குள் இருந்த இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனினும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வெளியிடாத பொலிஸார் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments