வெளிநாடு செல்ல வேண்டாம்: வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறும், அமர்விற்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை புறக்கணிக்க ஆளும் கட்சியின் குழுவொன்று தயாராகி வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
No comments