Header Ads

மழை வெள்ளத்தால் உயிர்சேதம் ஏற்படலாம்: அமெரிக்காவில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை!


மெக்சிக்கோவின் பசுபிக் கடற்கரையை நோக்கி நகரும் சூறாவளி வலுவிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனால் ஏற்பட்டு வரும் பெருவெள்ளம் உயிர்சேதத்தை விளைவிக்கலாம் என அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹிலரி எனப்படும் இந்த சூறாவளி காரணமாக மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில், தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது என  குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கலிபோனியா தீபகற்பகம் மற்றும் அமெரிக்காவின் தென் மேற்கு பகுதிகளில் காலநிலை சீர்கேடு தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

80 வருடங்களுக்கு பின்னர் இந்த வகையிலான சூறாவளி குறிப்பிட்ட பிரதேசங்களை தாக்கி வருகிறது என காலநிலைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சூறாவளி நகர்ந்து செல்லும் பகுதிகளில் வாழும் மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அவதானிக்கும்படி ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.