இராமநாதபுரத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 14.8 கிலோ கடத்தல் தங்கம் இராமநாதபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனை எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்த பணியில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது குறித்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக எடுச் செல்லப்பட்டு இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 14.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை கொண்டு சென்ற ஒருவரையும் நேற்று (30) புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments