மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவை ஆரம்பம்!
இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
வாராந்தம் ஆறு தடவைகள், மதுரை மற்றும் கொழும்புக்கு இடையே விமான சேவை இடம்பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் மதுரை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments