ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை!
ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரொருவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஈக்குவடோர் நாடாளுமன்ற உறுப்பினரான பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ, பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வெளியேறுகையில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காரில் ஏறுகின்ற போது 59 வயதான விலாவிசென்ஸியோவின் தலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என அவரது பிரசாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்செயலுக்கு தண்டனை வழங்கப்படும் என ஈக்குவடோர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
No comments