ஆயுதம் தாங்கிய படையினருக்கு அவசர அழைப்பு: ஜனாதிபதி ரணில் உத்தரவு!
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
No comments